பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கு. ப. ராஜகோபாலன் சிறுகதை இலக்கியம் பற்றிப் அேச முற்படுகிறவர்கள் மறக்கானல் குறிப்பிடுகிற கதாசிரியர்களில் கு. ப. ராஜ கோபாலனும் ஒருவர். இவக்கியத் தரமான சிறுகதைகளுக்கு இலக்கணம் கூதுவதுபோல் எழுதிவிருக்கிற பலரும் வலியுறுத்தும் அடிப் படைகளில் ஒன்று: சிறுகதைக்கு சொத்செட்டு அவசியம் ஆகும். சிறுகதையில் அநாவசியமான வார்த்தைகளுக்கு இடம் கிடையாது. வர்ணனைகளுக்காக வர்ணனையோ, சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்காகத் தேவையற்ற வளர்த்தல்களோ இடம் பெறக் கூடாது, இ. டி. ரா. கதைகளேப் படிக்கிற எவரும் இதை எளிதில் உணர இயலும், அவருடைய நடையின் எளிமையும், சொற் செட்டும் அதிசயிக்க வைக்கும் தன்மையில் உள்ளன. தனது பேரறிவையும் ராஸிக்கியத்தையும் புலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கு. ப. ரா. எழுதவில்லை. வாசக:ே மிரட்டவேண்டும், குழப்பவேண்டும், திகைக்க வைக்கவேண்டும் என்பது போன்ற உயர்ந்த நோக்கம்’ ஏதம் அலகுக்கு இருந்ததில்லை. பாரதியார் வலியுறுத்திய எளிமை கு. ப. சா. எழுத்துக்களில் மேலோங்கி திற்கிறது.