பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o பாரதிக்குப் பின் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. குடித்தனம் தடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை. - ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களி லும் சர்ச்சைகளிலும் பேசிய பொழுது, ஸ்திரீ புருஷர்கள் சeானர்களாகப் பழகவேண்டுமென்றும், பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனல் அனுஷ்டானத் தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவரமடைந்து விட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரிய மாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் விடுவோம்" என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான். மணியின் மனேவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம், எந்தப் பக்கத்திலும் ரயில் பாதைக்கே இருபது மைல் துரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதமான புதுமாதிரியான சின்னமும் காணவில்லை, விலையுயர்ந்த பெங்களுப் பட்டுச் சேைைய தேர்த்தி யாகக் கொசாம் விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழைய மாதிரி ரவிக்கை