பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 9ï தான் அணிந்திருந்தாள், தலை மயிரை நடுவே வகிரெடுத்துத் தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட நவநாகரிகப் போக்குப்படித் தொ ைதொளவென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை. பின்னலே எடுத்துக் கட்டிக் கொண் டிருந்தாள். நெற்றியில் பூர்ண சந்திரன் போலப் பெரிய குங்குமப் பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசர மாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப் பட்டவன் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மணம் தடுமாறிப் போனுன். ஒரு பெண் வத்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை, கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகின வன்தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.” இப்படி வளர்கிறது. கதை. கதைமாந்தரை வர்ணிக்கையிலும் ஒரு சில வரிகளில் எளிய சொற்களைக் கொண்டு, நேர்த்தியாகச் சித்திரித்து விடும் ஆற்றலே கு. ப. ரா. பெற்றிருந்தார். 'பூங்கா வனத்திற்கு வயது இருபத்தி நாலு. சிவப்பாக இருந்ததால் அவளுக்குப் பாப்பாத்தி என்று ஒரு பெயரும் உண்டு. நன்ருக மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டு எப் பொழுதும் பளிச்சென்று இருப்பாள். பேசும் பொழுது அமெரிக்கையாகச் சிரித்துக் கொண்டேதான் பேசுவாள். ரொம்ப நல்லவள் என்று இவளுக்கு ஊரில் செல்வாக்கும் உண்டு" ("அடிமைப் பயல்’)