பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 33 இடங்களில் பள்ளப் பெண்கள் மார்புச் சேலையை இடுப்பில் சுற்றிக்கொண்டு, முழங்கால் சேற்றில் மும் முரமாக நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள்.” . சில சந்தர்ப்பங்களில், பழமையான விஷயங்களை புதுமையான முறையில் எடுத்துச் சொல்கிற போக்கையும் கு. ப. ரா. நடையில் காணமுடிகிறது. 'அவள் தாயாரைப் பெற்ற பாட்டிதான் வீட்டில் பெரியவள். பாட்டி பழைய காலத்தின் பரிபூரணப் பிரதிநிதி; அதாவது, ஹிந்துக் கூட்டுக் குடும்ப முறையிலும், சமூக மதப் பழக்க வழக்கங்களிலும் சாரத்தை மறந்து ன்ெறும் சக்கையை வைத்துக்கொண்டு உயிரை வாங்கும் கோஷ்டியைச் சேர்ந்தவள். பேத்தி அலமு இப்படியான பிறகு, அவளுடைய வாழ்க்கையின் நன்னடத்தைப் பொறுப்பு முழுவதையும் தன்னிடம் அவள் புருஷன் ஒப்படைத்துச் சென்றுவிட்டதாக அவள் எண்ணினுள். கடுமையாகப் பேசுவதால்தான் ஒழுக்கம் தவருது என்ற நம்பிக்கை அவளுக்கு." உரையாடல் மூலம் கதையை ரசமாக வளர்த்துச் செல்கிற போக்கையும் கு.ப.ரா. பல கதைகளில் சிறப்பாகக் கையாண்டிருக்கிரு.ர். உரைநடையில் சோதனை ரீதியாக கு.ப.ரா. சிறுசிறு கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கிருர். அழகு, கற்பனை, உண்மை என்ற தலைப்புகளில் அவர் எழுதியுள்ள இச்சிறு கட்டுரைகள் கு.ப.ரா.வின் உரைநடை அழகுக்கும் சிந்தனை வீச்சுக்கும் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றன. - "அழகு பற்றிய கு.ப.ரா. சிந்தனே இங்கே எடுத்து எழுதப்பட்டுள்ளது "அழகு என்பது என்ன முதலில்? தத்துவமா, உருவமா?