பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ1. நேற்றைய முன் தினமும் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு, நான் அவன் வீட்டை அடைந் தேன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்ற போது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம் போல ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்திருந்த அவன், ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணி, திடீரென உட்புகச் சிறிது தயங்கி, ரேழியில் நின்றேன்... "என் நண்பன் சிரிப்பை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்தது கிடையாது என்பதும் உண்மைதான். அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத் தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தது. அவன் சமீபகாலமாக ஒருவித மனிதனுக ஐாறிவிட்டான்.” கதாபாத்திரத்தின் மனநிலைக்கும் சஞ்சல சித்தத்துக்கும் தகுந்தாற் போல் சுற்றுப்புறத்தைத் தேர்ந்து விரிவாக வும் நுணுக்கமாகவும் சித்திரிக்கும் மெளணியின் திறமை பாராட்டுதலுக்கு உரியது. 'அழியாச்சுடர் கதையில் விரக்தி மளுேபாவத்துடன் சோர்ந்திருக்கிற ஒருவன் ஒரு மரத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிருன். அவன் நண்பன் அந்த மரத்தைக் காண்கிருன், மெளனி இவ்வாறு விவரிக்கிருர்: "இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்டமரம் போன்ற தோற்றத்தை அளித்துக் கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் பட வில்லை. தனிப்பட்டு, தலைவிரி கோலத்தில் நின்று மெளன மாக புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது.