உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயில் நாளேடு 1948

இந்த நாளேடு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகத் துவக்கப்பட்டது. புதுச்சேரியின் தனி நலன்களையும், பிரெஞ்சு இந்தியாவின தனி நலன்களையும் வலியுறுத்த 13.9.1948 முதல் வெளிவந்தது. 14 நாட்களே நடைபெற்ற இந்த இதழ் 12.10.1948இல் நின்றது. இதன் நோக்கங்கள்:

1. இந்திய யூனியனிலிருந்து திராவிட நாடு விடுதலை பெற வேண்டும்.

2. உடனடியாகப் பிரெஞ்சு இந்தியா இந்திய யூனியனில் சேரக்கூடாது.

3. இந்திய யூனியனில் சேர மறுத்தபின் அது தன் விடுதலைக்குரிய இடையூறுகளைக் களைந்து கொள்ள வேண்டும்.

குயில் கிழமை இதழ்-1958

குயில் நாளேடு நிறுத்தப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு குயில் கிழமை இதழ் தோன்றியது. இது தொடர்ந்து இரண்டாண்டு ஏழு திங்கள் வெளி வந்தது. முதல் கிழமை இதழின் தலையங்கம் பின்வருமாறு:

"குயில் பாட்டும் உரைநடையுமாக வெளிவரும்; குயில் தமிழின் அருமை பெருமைகளைக் கூறும். தமிழ்மேல் பகைவர் வீசிய-வீசுகின்ற குப்பைகட்குப் புயலாகும். குயில் தமிழர்கள் நல்வாழ்வு பெறுவதில்தான் வெற்றி இருக்கின்றது என்ற உண்மையை உணரச் செய்யும்.”

இக்கிழமை இதழில் 'பாரதிதாசன் திருக்குறள்' என்ற தலைப்பில் குறள் வெண்பாக்களை எழுதினார். மொத்தம் 15 குறள் வெண்பாக்கள் இடம் பெற்றன.

தானும் உயிர்களும் வாழ்கஎனும் தன்மையே
தானம் எனும்நற் றமிழ்.

வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் திருக்குறள் உரைப்பகுதி 1-12-1959 முதல் தொடங்கப் பெற்றுக் கிழமை தோறும் இதழில்