பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித நேயர்

83

என்று கேள்வியாக எழுப்புகிறார். ஐம்பத்தாறாயிரவர் மடிந்த அந்தக் கோர சம்பவத்தின் காட்சியை


மாடம் இடிந்தனவாம் - அவை
மண்ணில் புதைந்தனவாம்
ஆடும் தரையோடும் -மெத்தை
அடுக்கொடிந் தனவாம்.
கூடத்து மக்களெலாம் - எழில்
கொழுஞ்சிப் பழம்போலே
வாட நசுங்கினராம் - ரத்த
வாடை எடுத்ததுவாம்

என்ற கண்ணீர் வரிகளால் படம்பிடித்துக் காட்டுகிறார். ஏழைகள் படும் துயரை இவர்போல சித்தரித்தவர் எவருமில்லை.


கந்தையணிந்தோம் இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையில் கூழைப் பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடப்போம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெல்லாம் இது செய்நன்றிதானோ?

என்று ஏழைகள் கேட்கும் கேள்வி நம் உள்ளத்தைப் பிசைகிறது.

பொதுவுடைமைக் கொள்கையின்பால் பற்றும் ஈடுபாடும் கொண்டவர் பாரதிதாசன். "பொதுவுடைமைக் கொள்கை திசை யெட்டும் சேர்ப்போம்" என்ற முரசு கொட்டியவர்.உருசியத் தொழிலாளி ஒருவன் பொதுவுடைமைத் தாள் ஒன்றில் ஏவுகணை பற்றி எழுதிய கருத்துகள் இவருடைய சிந்தனையைக் கிளறின. "ஏவுகணைகளை ஏவுவதால் என்னைப் போன்ற ஏழைகளுக்கு என்ன கிடைக்கும்?" என்று அத்தொழிலாளி கேட்டிருந்தான். எனவே உருசிய நாட்டிலும் ஏழைகள் வருந்தும் நிலையில் இருந்து வந்ததை அறிந்த பாரதிதாசன், வல்லரசுகளின் போட்டியின் நிமித்தம் பெரும்