பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆ பாரதிதாசன் உவமைநயம் உவமைகளை நயம்படக் கையாள்வதில் கவி பாரதிதாசன் தனிவன்மை பெற்றிருக்கிறார். வேறு எந்தக் கவிகளிடமும் காண இயலாத உவமை தயத்தை அவரது கவிதைகளில் காணலாம். சில அம்சங்களில் கவி பாரதியை விடப் பாரதிதாசன் உயர்ந்தவர் என்பது எனது கருத்து-முக்கியமாக உவமைகளை அமைப்பதில், மற்றக் கவிகளின் எழுத்திலே இல்லாத வேகமும் உறுதியும் பாரதி தாசன் கவிதைகளில் மின்னுவதுபோல, தமிழுக்கே புதுமையான அருமையான உவமைகள சுடா தெறிக்கின்றன, கவிஞரின் தனித்திறமையை ஒளி யுறுத்தியவண்ணம். அவ்வளவும் தமிழ் மணம் நிறைந்தவை. கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறும் தமிழ் உள்ளத்தின் வளத் தைக் கடறும் மாணிக்கங்கள் அவை. முன்பு செழிப்புற்றிருந்த தமிழ் இடைக்காலத் தில் தேக்கம் பெற்றது. இலக்கியத்தில் பழமைக் கருத்துக்களும், பழைய போக்குமே நெளிந்தன. கவிதை என்றால் பணக்காரர்களின் லீலா விநோதங்களை வர்ணிப்பது, ஸ்தல புராணம் பாடுவது என்ற நிலை ஏற்பட்டதைப் போலவே, சிந்தனைச் சோம்பலும் பாசியாய் படர்ந்தது. அதனால் என்ன ஆயிற்று? தமிழ்க் காவிய உலகம் ஒரே தாமரைக் காடாக மாறிவிட்டது. கவிதையில் உவமை வேண்டுமானால், தாமரை தான் தலை காட்டியது. முகம் தாமரை, கண் தாமரை வாய் குமுதம், கை அரவிந்தம், தாளும் அஃதே மதிவதனமும், பிறை நெற்றியும்