பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை எழில் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும், கேட்கும் விஷயங்களுக்கும் கவிதைக்கும் சம்பந் தம் இருக்கக் கூடாது என்று எண்ணியதாலோ என்னவோ, கவிதை என்றால் அளவுக்கு மீறி அளத்தல் என்று விரித்துரைக்கும்படி வளர்ந்து விட்டது அது. சாதாரண வாசகனும் புரிந்து அனுபவிக்கிற முறையில் விஷயங்களை விளக் காமல், தெரியாதவற்றைக் கூறி குழம்பச் செய்வதே கவிதையின் லட்சணம் என முன்னுள் ளோர் முடிவு கட்டிவிட்டார்கள். அத்துடன் அமானுவிகமெருகும் பூசமுயன்றதனால் கவிதை, வாழ்வின் எல்லையை விட்டுத் துரப்போய் விட்டது. அதன் பயனாக, அழகிகளைப் பற்றிய உவமைகள் கடிட நீராமின்னாளோ, நிச நாகக் கன்னிகையோ சூராமின்னாளோ! என்றும் காம னும் கண்டுகாமுறும் கன்னி திருவும் வெட்குறும் அழகு ரதியைப் பழிக்கும் ரூபம்’ என்றுமே எழுத நேர்ந்தது. இவ்விதக் காவியங்களைக் கரைத்துக்குடித்தவர்கள் தமிழ் எழுதவந்தவுடனே பழைய வாசனைதான் அடித்தது. வழவழா என்று வர்ணித்துவிட்டு அவள் அழகை ஆயிரம் நாப டைத்த ஆதிசேஷனும் வர்ணிக்க முடியாது என் றால் நாம் எப்படி எழுத இயலும்!’ என்று முற்றுப் :புள்ளி வைப்பவர்கள் பலர்.