பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தி பாரதிதாசன் உவமைநயம் தனையும் சொக்கத் தங்கம். அவற்றில் ஒளிரும் உவமைகளோ புதுமையின் மணிகள். காதலனும் காதலியும் ஒன்றுபட்டதை உவ மிக்க எண்ணுகிறவர்களுக்கு ஒருயிரும் ஈருடலும்: பூவும் நாரும் மலரும் மணமும் போன்ற சில சொற்றொடர்கள்தான் அகப்படும். ஆனால் புரட்சிக் கவிஞரின் வரிகளில் புதுமையைக் காணலாம். கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக் கலத்திடும் இன்பம் வெள்ளத்தினோடொரு வெள்ளமு மாய் நல்ல வீனை பும் நாதமும் ஆகி விட்டார்." இப்படிக் கண்களும் ஒளியும் போலக் கவின் மலர் வாசம் போல’க் கூடுகின்ற அவனும் அவளும் எங்கிருந்தால்தான் என்ன? சங்கமம் ஏற்படுவது இயற்கை. எப்படி என்றாலோ? "திங்கள் ஒருபுறமும்-மற்றைச் சேங்கதிர் ஒர் புறமும் தங்கி விருத்திடினும் -ஒளி தாவுதல் தீண்டது போல், அங்கம் பிரிந்திருந்தும் சங்கமம் ஆவதுண்டாம்-காதற் சமுத்திர விழிகள்! பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர் பால் நிலவாயிரம் போல்-அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல் என்பது அவள் கொள்ளை வனப்பினில் காலிடறி விழுந்த காதலன் வாக்கு!