பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 21 விழிச் சமுத்திரங்கள் சங்கமமாகிவிட்டன. இதயங்கள் ஒன்றின. ஆசை இருக்கிறது. என்றா லும் இன்பம் அனுபவிக்க முடியவில்லை. காதலர் உள்ளம் ஏங்கத்தானே செய்யும். எவ்விதம் இருக்கும் அந்த நிலை? அறுசுவை அன்னம் எதிரே இருக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடக் கூடாது என்று தடை குறுக்கே விழுகிறது. பசியுடனுள்ளவன் எப்படித் துடிப்பான். அதே போன்ற தவிப்புத்தான் காதலருடையதும். 'உண்ணும் அமுதிருந்தும்-எதிர் உண்ண முடிவதில்லை. தண்டமிழ்ப் பாட்டிருந்தும்-செவி சாய்ந்தி டக் கூடவில்லை : ஆசையுடன் நெருங்குகிற அன்பனைக் காதலியே விலக்குகின்ற இடத்திலே வந்து விழும் உவமைகளும் கவனிக்கத் தக்கவை. கண்ணுக்குள் பாவையே! கட்ட முதை நான் பசியோடு உண்ணப்போம் போது நீ ஓர் தட்டுத் தட்டி விட்டாய்! தாழச்சுடு வெய்யில் தாளாமல் நான் குளிர்ந்த நிழலைத் தாவும் போது நில் என்று நீ தடுத்தாய்!" காதலனைச் சந்தித்து இன்பம்பெற முடியாத காதலிக்கு வாழ்க்கையே கசந்து விடுகிறது.