பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. பாரதிதாசன் உவமை நயம் காதலிக்காக அன்பன் பெரிய காரியங்களை பும் எளிதில் செய்து முடிக்கத் தயாராக இருக் கிறான் ஏன்? கிட்டசிய காதற்கிழத்தி இடும் வேலை விட்டெறிந்த கல்லைப்போலே மேலேறிப் பாயாதோ? காதல் வன்மை மிக்கது. அதை கட்டுப்பாடு தீய்த்துவிட முடியாது. கட்டுப்பாடு எந்த உணர்ச்சியைத்தான் அடக்கிவிட முடியும்? புரட்சிக் கவி'யில் வரும் காதலன் கேட்கிறான். காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ? கறைச் சேற்றால் தாமரையின் வாசம்போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ? பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ? தேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால் நிதை தொழிலாளர்களுணர்வு மறைந்துபோமோ? போகாது. காதலும் அப்படித்தான்.