பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முததம் காதலரின் இன்ப முத்திரைகளான முத்தங்: கள் புரட்சிக் கவிஞரின் கவிதையில் புதுமை நயம் பெற்றுள்ளன. அவ்வளவும் உ வ ைம யி ன் முத்திரைகள். காதலியின் இதழ் இன்ப நிலமாகிறது. அன் பன் முத்தம் பயிரிட்டுப் பலனடைகிறானாம்: எப்படி? ‘இதழ் நிலத்தில் கன உதட்டை ஊன்றினான், விதைத்தான் முத்தம்' கிழங்கு பறித்தெடுப்பது போல ஆழப் பறித். தான் முத்தம். எவ்விதம்? "மாரோடணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு பறித்தான் முத்தம்’ இவ்வளவுதானா இல்லை. முத்தம் சுவைத் தல் காவிய ஆராய்ச்சி போல நடைபெறுகிறது. அவள் கன்னம் தமிழ்ச்சுவடி. அதில் ஊறும் கவிதையை அவன் ரசிக்கிறான். அதைச் சுவை யுடன் காட்டும் ரசமான கவிதை இதோ தாமரைபோய் ச் சந்தனத்தில் புதைந்ததைப் போல் தமிழ்ச் சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை நேமமுறச் செலுத்தி நிறுங் கவிச்சுவைகள் நெடு மூச்சுக் கொண்டமட்டும் உறுஞ்சி நின்று