பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இ. பாரதிதாசன் உவமைநயம் SAMM AAAA S S S S S S S S S S S S SJA YY C "இச் சென்று முடித்தான் முத்தம்!” ஒரு சிறு நாடகம். முத்தம் அதன் முடிவு. அவள் குடும்ப விளக்கு. அத்தான் உண்டு களித்ததும் அம்மங்கை நல்லாள் வெற்றிலைச் சுருள் மடித்து நீட்டுகிறாள் அவன் முன்னே. ஆனால் அவள் மனமோ அதை அவன் மலர் வாயில் தரத் தவிக்கிறது கை முந்தி விட்டது: அவன் கேட்கிறான் சுருளுக்கு என்ன விலை? என்று. பொருளுக்குத் தக்கதே போதும் என்றாள் காரிகை. கையில் கொடுப்பதைக் காட்டிலும் வாயில் தந்திடு மங்கையே’ எனக் கொஞ்சினான் ஆளன். அவள் துடித்ததும் அதற்குத்தானே! பின் தயங்கவா போகிறாள்! மகிழ்வுடன் செங்கை உயர்த்தினாள். மின் வீச்சு முத்தம் விழுந்தது கையில், அது எதற்கு விலை? அதன் மதிப்பென்ன? கவிஞரே கூறட்டும்: 'சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள் குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல் தளிர்க்கைக்கு முத்தம் தந்து குளிர்வாய் வெற்றிலை குழைய ஏ கினனே!"