பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மை ஒடிவரும் குழந்தையை ஆசையுடன் அள்ளி அனைத்திட முந்துவது தாய்மைப் பண்பு. தாய்மை பெண்மையின் லட்சியம். மட்டற்ற இன்பம் அளிப்பது. ஒரு தாய், குடும்ப விளக்கு. பள்ளிவிட்ட மாணவர்கள் துள்ளி வருவதைக் கண்டாள். மக் களை வரவேற்க விரைகிறாள். எப்படி? கவிஞர் பாரதிதாசன் அந்தக் காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளின் உள்ளத் துள்ளலும், அன்னையின் ஆசைத்துடிப்பும் இனிய உவமைகளில் ஒளிவிடுகின்றன. "குழந்தைகள் பள்ளி விட்டு வந்தார்கள்; குருவிக் கூட்டம் இழந்த நல்லுரிமை தன்னை எய்தியே மகிழ்வதைப் போல்! வழிந்தோடும் புது வெள்ளத்தை வரவேற்கும் உழவரைப் போல் எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்தினாள் இரு கையாலும்’ மண்ணையும் தண்ணிரையும் உழைப்பையும் நம்பி வாழும் உழவன் புதுப்பெருக்கை வரவேற் கும் ஆசை அன்னையின் ஆவலுக்கு ஒப்பிடப்பட் டிருப்பது அருமையாக உள்ளது. உழவன் பயி ரிடும் பருவத்து, நீர் நிலையை ஆசைக் கண்