பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதிதாசன் உவமை நயம் களால் நோக்குவது இயல்பு. அதுவேறு இடத்தில் அழகாகக் கையாளப்படுகிறது, காதலி பருகும் பார்வைக்கு ஒப்பாக. "மடுப்புணலைப் புன்செய் உழவன் பார்த்தல்போல் மங்கை ஒன நோக்குகிறாள்' காதலன் கூற்றாக, கவிஞர் அமைத்துள்ள இவ்வுவமை புதுமையாய், இனிமையாய் விளங்க வில்லையா? இவ்விதம் காதலில் களிப்புறுவதும், குடும்ப வாழ்வில் இனிமை கண்டு, தாய்மையில் பெண் னின் பெருமையை எய்துவதும் மங்கையின் வாழ்க்கை நலம் இவற்றைக் கண்டு கவி உள்ளம் ஆனந்திப்பதும் இயல்பு. இதே வேளையில், வாழ்க்கையை அனுப. விக்க முடியாமல் எண்ணற்ற மெல்லியலார் வதங்குவதை யார்தான் சகிக்க முடியும்? அழகு மலர்கள் அவ்விதம் கருக வேண்டும் எனக் குள்ள நரிச் சமூகம் விதிப்பது என்றால் அச்சமுதாயத் தின் மீது சீற்றம் கொள்வது இயல்பு தானே? மனிதர்கள் மனிதராக வாழவேண்டும். அதற். குரிய வகை காண்போம் என வாழும் சிந்தனை யாளர்கள் மனமிழந்த மங்கையர் நிலைகண்டு ஏங்காமல் இருக்க முடியுமா? கவிஞர் பாரதிதாசன் புதுயுகச் சிற்பி. கவிதை ஒளிகாட்டிப் புதுவாழ்வுக்கு வழிகாட்ட வந்த புரட்சியாளர். அவர் கைமைப் பழியைக் கண்