பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 29 டிக்கும் தன்மை, சுட்டிக் காட்டும் உண்மைகள் உள்ளம் உருக்குவன. சுவைத்தறியாச் சுவைதரும் கனிவாய்” மங்கை இளமை ததும்ப, எழிலும் ததும்பக் காதல் ததும்பக் கண்ணிர் ததும்பி ஏங்கிக் கிடக்கும் நிலை எத்தகையது? அதைக் கவிஞர் விளக்கு கிறார் கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா-மிகக் கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா! மிகச் சுவையுடைய தீங்கனி கவனிக்கப்படா மல் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலா அமுதம். இன்ப விளக்கு, எழிலின் களஞ்சியம். காதலின் துாது. அதை மிக்க கொடியது என்று தள்ளுவதுபோல் இருக்கிறது, பெண்ணை விதவை என மூலையில் முடங்கிடச் செய்வது. அவர்கள் இகழ்வது எதை? வெறுத்து ஒதுக்கு வது, எதைத் தள்ளுவது போலிருக்கிறது? விஷ மென அஞ்சுவது எதைக் கண்டு? சீரற்றிருக்கு தையோ குளிர் தென்றல் சிறந்திடும் பூஞ் சோலை-சீ சீ என் றிகழ்ந்தி.ப் பட்ட தண்ணே நறுஞ் சீதளப்பூ மாலை” நாடப்படா தென்று நீக்கி வைத்தார்கள் நலஞ்செய் கறுங் கணியைக்-கெட்ட நஞ்சென்று சொல்லிவைத் தார் எழில் வீணை நரம்பு தரும் தொனியை