பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 31 புற்றரவு ஒத்தது தாயருள்ளம் என்று கவிஞர் பழிப்பதில் குறையே கிடையாது. கோழியும் தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் வான் பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத இத்தொல்புவியில்: கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள் காதலும் தானும் கனலும் புழுவுமாய் ஒங்கிட, வகை செய் யும் தாய்களும் இருக்கின்றார்கள். கருகும் உள் ளங்கள் மண்ணாய்ப் போக, மண்ணாய்ப்போக! மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப்போக: சமூகச் சட்டமே, சமூக வழக்கமே! நீங்கள், மக்கள் அனைவரும் ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே' என்று சபிக்கத்தான் செய்யும்!