பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலா வர்ணனை பாரதிதாசனின் கவிதா மேதையை எடுத்துக் காட்டும் ஒரே பகுதி மட்டும் கூறுக என்று கேட் டால், தயக்கமின்றி நான் சுட்டக் கூடியது நிலா வர்ணனையேயாகும். புரட்சிக்கவி நிலவைக் கண்டு களிப்பூறப் பாடுகின்ற வர்ணனை, அற் புதமான, தமிழின் வளத்தை வளப்படுத்தும், மணிக்கவிதை. அது உவமைகள் துள்ளிப்பாயும் உணர்வின் ஊற்று. விண்ணை ஒளியால் கவ்வி, இருட் காட்டை அழித்து வரும் நிலா வைப்பற்றி இதுவரை யாருமே பாடாத உயரிய உவமைகளுடன் நமது கவிஞர் பாடுகிறார். அம்புலியை விண்மோகினியாகக் காட்டு கின்ற கவிதையின் எடுப்பே அற்புதக் கற்பனை யாக மலர்கிறது: 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோல முழுதும் காட் டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? பின்னர் சந்திரனை வியந்து கூறச் சிதறு கின்ற உவமைகள் மிக இனியன. வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீ தான்! சொக்க வெள்ளிப்பாற்குடமோ அமுத ஊற்றோ? காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ?