பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ; 33 இதுவரை கவிகள் அம்புலியைக் கதிரவனின் காதலியாகவே கண்டார்கள். ஆனால் நமது கவிஞர் செங்கதிரின் மறுமலர்ச்சிதான் முழு மதியோ எனக் கேட்பது அருமையாக அமைந் துள்ளது. இருள், உலகை, வானை, திசைகளை விழுங்குகிறது. இருள்! எங்கும் இருள். அவ் வேளையிலே ஒளிப்பூவாய்த் தலைதுாக்குகிறது நிலா. அது என்ன? பெருமித வெற்றி பெற்ற காரிருள் சிரிக்கும் ஒளியா என்று கேட்கிறார் கவி. காரிருள்தான் சிசித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளி முத்தோ நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகையெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென்றே இயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ? இந்த இன்பமெனும் பால் நுரையை, குளிர் விளக்கை கண்டதனால் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிக்கு உவமை ஏது என்று சொல்ல வில்லை நம் கவி. ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுவதற்குத்தான் வார்த்தை கிடைக்கவில் லையே தவிர எழில்மிகு உவமை பொங்குகிறது கவிதையில். உழைத்தாலும்கூட வயிறு நிரம்ப வகை யின்றி பசியால் செத்துக்கொண்டிருப்பவன் எதைக்கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைவான்? { Li, a- - છે