பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பு அழகின் ஒளிவிளக்குகளான சந்திரனையும், சூரியனையும் அழகுக் கவிதையில் பதித்தது போலவே, இயற்கைச் செல்வங்கள் அனைத்தை யும் பற்றிய இனிய பாடல்கள் கவிஞரின் சிருஷ்டி களில் மிளிர்கின்றன. அழகின் துகள்கள் எல்லாம் தனி அழகாய் மின்னுகின்றன. அவரது கவிதை களில். ‘அழகின் சிரிப்பு என்ற நூல் முழுவதும் எழிற் கவிதைகளின் பூரிப்பு உவமைகளின் பேரெழில் காணும் இடங்களில் எல்லாம் அழகு சிரிப்பதுபோல கவிஞரின் பாடல்களில் எங்கும் உவமை குலுங்குகிறது. தமிழ் விருந்து சுவைக்கும் உள்ளங்களுக்கு ஆனந்தம்தான். அலையெறியும் ம கடலின் தோற்றம் விந்தைக் காட்சியாக உருவாகிறது. "கடலிடைப் புனலில் ஆடிக் குளிரினிற் கனிந்த காற்றை உடலிடைப் பூசுகின்ற ஒலி கடற் கரையின் ஒரம் அடர் சிற கன்னப் புட்கள், அணிபோல அலை நடக்கும்’ இவ்விதம் குடும்பவிளக்கு கூறுகிறது. ‘அழகின் சிரிப்பு இதே அன்னப் பறவைகளின் வரிசைபோல் நடைபயிலும் அலைகளை வர்ணிக் கும் விதம் வேறு: