பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆ பாரதிதாசன் உவவை நயம் வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வதைப் போல் துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்: எழுந்து புரண்டும் உருளுகின்ற அலைகள் கும்மாளியிடும் கோலம் சிறுவர்களின் தன்மையை நினைவுறுத்துகிறது கவிஞருக்கு. உடனே உவமையாக மலர்கிறது. பெருங்கடல் ஓர மெல்லாம் கீரியின் உடல் வண்ணம் போல் மணல் மெத்தை அம் மெத்தை மேல் நேரிடும் அலையோ, கல்வி திலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும், வீழும். புரண்டிடும்" கிரியின் உடல் வண்ணம்போல்’ என்று கூறும் நயம் கவனிக்கத்தக்கது. இயற்கையில் ஒரு கூத்து. இசையரங்கு கடல ருகில் நடைபெறுகிறது. இதோ உருவகமாகிறது அவ்வரங்கு. கடல் நீரும் நீலவானும் கைகோக்கும்! அதற் கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில் வீணை. அவ்வினை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத் தின்பத்தை வடிக்கின்ற புலவன்!" அழகு மிக்க கடல்மங்கை அழகு செய்து மினுக்குவதில் ஆசை உடையவள், பெண்களைப்