பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆதி பாரதிதாசன் உவமை நயம் சரிவுகள்: நுரையோ முத்துத் தடுக்குகள்! சுழல் மீன் கொத்தி மரகத வீச்சு நீரில் மிதக்கின்ற மரங்களின் மேல் ஒரு நாரை வெண்டாழம் பூ! உவப்புக்கோ உவமை யில்லை! வெள்ளம் முன்னேறுகிறது. ஆற்றங்கரை மரங்களின் மலர்கள் நீர்மேல் விழுகின்றன, வெள்ளத்தை வாழ்த்துவது போல. ஏன்? வெள்ளம் பாய்வது எப்படி இருக்கிறது? அது ஒரு படையெடுப்பு! "ஒரே வகை ஆடை பூண்ட பெரும் படை ஒழுங்காய் நின்று சரே லெனப் பகை மேற் பாயும் தன்மை போல் ஆற்று வெள்ளம் இரா வெலாம் நடத்தல் கண்ட இருக ரை மரங்கள், தோல்வி வர வண்ணம் நெஞ்சால் வாழ்த்தி மலர் வீசும் கிளைத் தோள் நீட்டி!" அருவிகளும், கொடிகளும், மலர்களும் திறைந்த காடு குருவிகள், தத்தித் திரிகின்றன. வேங்கை ஒன்று எருதுமேல் பாய்கிறது. தரை யெங்கும் அவ்வளவையும் காணும் கண்கள் சிந்தையிலே ஒப்புகளையும் உண்டாக்குகின்றன. அருவிகள், வயிரத் தொங்கல் அடர் கொடி, பச்சைப் பட்டே! குருவிகள், தங்கக் கட்டி குளிர்மலர், மணியின் குப்பை !