பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 43, எருதின் மேற் பாயும் வேங்கை நிலவுமேல் எழுந்த மின்னல்! சருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பாரடா நீ! தாமரை பூத்த தடாகத்தைக் காட்டுகிறார். கவி. இலைக்காடுகளிடையே அற்புதமாய்த் தலை நிமிர்ந்து நிற்கும் அரும்புகள். அலரும் மலர் கள். நீர்ப்பரப்பு எல்லாமே அழகுமயம். அவை எப்படித் தோன்றுகின்றன என்று கவிஞர் உவமை யுடன் கடறுவது அழகுக்கு அழகு செய்கிறது. 'பச்சை இலைத் தட்டில் சிந்தும் பால் போல் எழில் நீரும், கரிய பாம்பின் தலைகள் போல் நிமிர்ந்திருந்த தாமரைச் சிற்றரும்பும்’ "மாணிக்கம் சிதறுதல் போல் இருக்கும் அப் பச்சிலை மேல் அரும்புகள் இதழ் விரிக்கும்’! விரிந்த இதழ்க்கடிட்டம் எவ்விதம் காட்சி. யளிக்கிறது? பச்சைப் பட்டு போர்த்த மங்கையர் கள் செவ்விதழால் வானைப் பார்த்து சிரிக்கின்றார் களோ என எண்ணத் தோன்றுகிறது! விரிக்கின்ற பச்சைப் பட்டை மேனி போர்த்துக் கிடந்து வரிக்கின்ற பெண்கள், வான வீதியைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கின்ற இதழ்க் கூட்டத்தார்’ நீர் மீது மிதக்கும் இலைகளிலே பாதரசச் சிதறல்கள் போல நீர் உருண்டு ஒடுகிறதல்லவா?