பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & பாரதிதாசன் உவமை நயம் தம் மனை தோறும் உலர்வதற்காக வெளியே, வட்டம் பரப்பியிருக்கும் மீன்களைப்போல் கிடக் கின்றன என்கிறார். மரத்தின் பூ, மான்கொம்பு, செம்படவர்கள் காயப்போடும் மீன்கள் அனைத். தையும் அழகாக இணைத்துள்ளார் உவமையாக அது கலை. பார்க்கப் போனால், கவிஞர் பாரதிதாசன் இந்தக் கலையில் மிகவும் கைவந்தவர் என்பதை அவரது கவிதைகள் காட்டுகின்றன. சாதாரண விஷயங்களும் அவரிடம் உயர்ந்த இடத்தைப் பெற்றுவிடுகின்றன. எளிய பொருள்களும் எழில் மிக்க உண்மைகளாக உருவெடுக்கின்றன. தேன்குழல் கிடைத்தால் பொதுவாக உடனே வாயில் போடத்தான் எழுச்சி பிறக்கும். அது எப்படி இருக்கிறது, அதற்கு என்ன உவமை கடறலாம் என்று கலை ஆராய்ச்சி செய்ய ஓடாது. கவியுள்ளம் இதையெல்லாம் ஆராய்ந்துகொண் டிருக்க வேண்டுமென்பதில்லை. பார் த் த உடனேயே, முன்பு கண்ட ஒரு பொருள் ஒடி வந்து நினைவில் நிழலாடுகிறது. இதற்கு இணை யாக. சமயம் வந்தபோது இரண்டும் கவிதையில் இடம் பெற்று விடுகின்றன. இதுதான் திறமை யின் வேலை. பாரதிதாசன் தேன்குழலுக்கு மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ சிறு சிறு பொருள்களுக்கும் அழகான, கவர்ச்சிகரமான உவமைகள் கொடுத் திருக்கிறார். அவரது நூல்களில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடக்கும் அவை இதோ