பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் இது 51 இருள் அடர்ந்த வீடு. இருளை ஒட்ட மங்கை விளக்கேற்றுகிறாள். அதன் சுடர் மின்னுகிறது. அதைப்போல் இலங்குகிறது இயற்கையிலே எரியும் விளக்கு அழகியது, அச்சுடரிலே மற்றுமோர் விளக்கை ஏற்றி எடுத்துச் செல்வதும் அழகு நிறைந்ததே. இவ் அழகுத் தொழிலைச் செய்வது போலக் கிளி கொத்திப் போகிறது. இது விளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்வதுபோல் ஒளி வீசுகிறது என்பது கவிதை. "பச்சிலை மேல் - பளிச் சென எரியும் கோவைப் பழத்தில் உன் மூக்கை ஊன்றி விளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்லல் போல் சென்றாய்; ஆலின் கிளைக் கிடை இலையும் காயும் கிடத்தல் போல் கிடந்தாய்!” புகை எங்கும் பரவுதலை பெரியோரின் உள்ளம் எங்கும் பெருகல்போல் பெருகி’ என்றும், சொல்வதைக் கவனியாமல் முந்திரிக்கொட்டைத் தனம் செய்கிறவனிடம் குறிப்பறியாமல் நீவிர், குண்டானிற் கவிழ்த்த நீர் போல் கொட்டாதீர்’ எனவும், இருளில் வழிதடவி நடக்கும் சிரமத்தை 'ஒடைக்குள் காலால் வழிதடவும் கஷ்டம் போல்’ என்றும் கடறுவது ரசிக்கவேண்டிய பகுதி. கவனிப்பாக ஒன்றை நிறைவேற்றுவதை கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைப்