பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச் சுவை கவிதையில் நகைச்சுவையைத் திறம்படக் கலப்பதில் கவிஞர் பாரதிதாசன் வல்லவர் என்பது யாவரும் அறிந்ததே. தென்றல் போன்ற இனிய நகைச்சுவையுடன், முரட்டுக் கிண்டலும் அவரது கவிதையில் ஆங்காங்கே தொனிப்பது உண்டு. அதே இயல்பு உவமைகளிலும் சில இடங் களில் காணக்கிடக்கிறது. இருண்ட வீடு காவி பத்திலிருந்து சில உவமைகள்... சோம்பலின் அவதாரமான வீட்டுக்காரி நீட்டிநெளிந்து எழுகிறாள். அவளைப் பார்க்கவே சகிக்காது. அவ்விதத் தோற்றம். அவளை அறி முகம் செய்யும் கவிஞர் கூறுகிறார்: பொத்தல் மரத்தில் புழுப் போல் நெளிந்தே எழுந்தாள்! அவளோ, பிழிந்து போட்ட கருப்பஞ் சக்கையின் கற்றை போல் இருந்தாள்' அவளது கண்ணழகை நயமாகக் காட்டு கிறது. இந்த வரிகள் பாதி திறந்த கோதையின் விழியோ பலகறை நடுவில் பதித்த கோடுபோல் தோன்றிற்று!" அவள் எழுந்துபோய்க் கோலமிட ஆரம்பித் தாள். அவள் எண்ணியது என்னவோ தாமரைப்