பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இதுவரை கண்ட உவமைகளிலேயே கவிஞர் பாரதிதாசனுக்கு உரிய பல தனிச் சிறப்புகளை அனுபவித்தோம். அவற்றுக்கெல்லாம் மேலாக அமைந்திருப்பது தமிழையும் தமிழன் பண்பை யும் ஏற்ற உவமைப் பொருள்களாக மாற்றிக் கலந்திருப்பது. கவிஞரின் தமிழ்க் காதல் அவ் விதம் ஒளி வீசி மின்னுகிறது. 'தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யான் கண்டதில்லை’ என்றுதான் சொல்லவேண்டும். காதலன் தனது காதலியை உவமைகளால் அர்ச்சித்து எந்தன் தீந்தமிழே!’ என் முத்தாய்ப்பு வைப்பதையும், அவள் கன்னங்கள் தமிழ்ச் சுவடி யாவதையும், அவனும் அவளும் கலந் திருப்பதை தமிழும் அன்பும் கலந்தது போல’ என்று குறிப்பதையும் நமது கவிஞரின் நூல்களில் தான் காண முடியும். 'தண்டமிழின் இனிமைபோல் இனிய சொல் லான் தணல் நிற மாம்பழத்தில் தமிழ் நிகர் சுவையைக் கண்டாள்-இப்படி எவ்வளவோ. ‘இனிமைத் தமிழ் மொழி எமது; எமக்கின் பந் தரும்படி வாய்த்த நல் அமுது என்று கூறும் கவிஞர் தமிழையும் தமிழாராய்ச்சி சிறப்பையும்