பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆ பாரதிதாசன் உவமை நயம் இனிய உவமைகளாக்கி எல்லோருக்கும் இன்ப அமுது அளிக்கிறார் என்றால் அது மிகையல்ல. குழந்தைகள் உணவு உண்பது எப்படி இருக் கிறதாம்? படித்தவர்கள் பழந்தமிழ் இலக்கிய தயங்களை சுவைத்து அள்ளி விழுங்குவது போல. 'குழத்தைகள் உடனிருந்து கொஞ்சியே உண்ணுகின்றார் பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதல் போல்" என்பது கவிதை. இன்னும் வல்லார் இலக்கி யத்தை வாரி அருந்துதல் போல் சிற்றுணவு உண் கிறார்கள்’ என்று வேறிடத்தில் குறிக்கின்றார். தமிழின் இலக்கிய நயத்தை ருசிப்பவர் தனி மையில் அமர்ந்து அதை எண்ணி எண்ணிக் களிப்பது இயல்பு. இதைப்பொருத்தமான உவமை யாக்குகிறார். எதற்கு? உள்ளத்தைக் கவர்ந்து ஒடி மறைந்த காதலியை நினைத்து உருகுகின்ற காதலனுக்கு 'நெஞ்சைக் கிளி பறித்துப் போனதால் மரம்போல் அங்கே தண்ட மிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித் தனிப்பார் போல் தனித்திருந்தாள்' குடும்பத் தலைவி துணிகளைக் கவனித்து, கிழிந்திருப்பதைத் தைக்கும் பான்மையை * பண்டிதர்கள் பழங்கதையின் ஒட்டைக்கெல்லாம் தணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தாள்