பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஜீ பாரதிதாசன் உவமை நயம் தமிழ் மொழி அலட்சியம் செய்யப்படுவதைக் கண்ட கவியுள்ளம் துயருறுகிறது. அந்த நிலை யிலே உணர்ச்சி, சொற்களாக உருளுகின்றது. இருளுக்குள் சித்திரத்தின் திறன் ஏற்படுமோ? இன்பம் வாய்த்திடுமோ? உருவற்றுப் போன துண்டோ-மிக்க உயர் வுற்ற தமிழ் மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு? கருவுற்ற செந்தமிழ்ச் சொல்-ஒரு கதியற்றுப் போனதுண்டோ! தமிழில் இசைக்கின்றாள் ஒருத்தி. அத்தனை யும் இன் பப்பெருக்கு. அது உள்ளத்தைத் தொடர மலா போகும்! களிப்பு கவிதையாக மாறுகிறது. உள்ளத்தில் கவிதை வைத்தே உயிரினால் எழுப்பினாள். அவ் வெள்ளத்தில் கலையைக் கோத்தாள் வீணையின் அளவிற் சாய்த்தாள் இன்னிசை பொங்கி வழிந்து ஒடியது. கேட் போர் செவியில் பாய்ந்து உள்ளத்தை நனைத்தது. அதனால் பெறுகிற இன்பம் எப்படி இருக்கிறது என்றால், கோடையின் வறட்சிக் கொடுமை போக்க வந்த குளிர்நீர் தருகின்ற மகிழ்வு போல தெள்ளத் தெளிந்த நீர் போல் செந்தமிழ்ப் பொருள் போய் நெஞ்சப் பள்ளத்தில், கோடைத் துன்பம் பறந்திடப் பாய்ச்சி விட்டான்' தமிழைப்பற்றியே தனிப்பாடல்கள் பலவும் பாடியிருக்கிறார் கவிஞர். அவரது தமிழ்ப்பற்றை விளக்கும் மணிகள் அவை. தமிழ் இன்பத் தமிழ்,