பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 59 எங்கள் உயிருக்கு நேர்' எனவும் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்' என்றும் சொல்லும் கவிஞர் தம்மையும் தமிழையும் இணைத்துக் கடறுகிறார், நயமாக, நிலாவும் வானமும் போல, பூவும் மணமும் போல, கிளியும் ஒளியும் போல, தமிழும் நானும் என்கிறார்.

  • வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே வண்ணப்பூவும் மனமும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ!'

தமிழ், வலிமை மிக்க ஆயுதங்கன் குவிந்த, படைவீடு. கவிஞரோ அவற்றை எவ்விதம் ஆட்சி செலுத்துவது என்பதை உணர்ந்த வீரத் தமிழன். தமிழ்தேன் துளும்பும் மலர் என்றால் கவிஞர் அதைச் சுவைக்கும் தும்பி. இவ்விதம் கூறும் துணிவு பாரதிதாசன் ஒருவருக்குத்தான் உண்டு. "தமிழ் கருமான்செய் படைவீடு நான் அங்கோர் மறவன்! கன்னற் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி’ இதைப் படித்தவுடன் வாழ்க மறவன் வாழ்க மலர்க்காடு வாழ்க தும்பி’ என்று வாழ்த்துக்களை அள்ளிச் சொரிகிறது ரசிக உள்ளம்.