பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 63 குறை ஒன்று மோதுமாயின் தோணி ஓட்டம் மே வுமோ? இந்த உவமை மிகவும் தகுந்தது. அலை எறி ஆயும் விரிகடல் ஒருநாள் கொந்தளிக்கத்தான் செய் யும். அனல் தாங்கும் எரிமலை ஒருநாள் தீ உமிழத்தான் செய்யும், ஆனால் அதுவரை செல்வர் சதிராட்டம் கண்டு களிப்பார்கள். சதிராடுவது யார்? செல்வம்தான்! தரித்திரர் களை துடிக்கவிட்டுச் செல்வருடன் கொஞ்சம் தேவடியாளாகி விட்டது செல்வம். அதிகரித்த தொகை தொகையாய்ச் செல்வமெல்லாம் அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு சதிராடு தேவடியாள் போல் ஆடிற்று: தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்" உழைப்புக்கும் திறமைக்கும் தேவைக்கும் தக் கது போல பொருளாதாரம் அமையவில்லை. அட்டைகள் சிலர் உழைப்போருக்கு நாமம் தீட்டி தாம் கொழுத்தனர். இறைக்க இறைக்க நிறைய வேண்டியதற்குப் பதிலாக, ஏந்தியதை ஒழுக விட் டார் செயலற்றோர். குள்ளநரிச் செயலுடையார் அவ்வளவையும் தேக்கிவைக்கும் தொட்டிகள் ஆனார்கள். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள் கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்ததாலே கூலிமக்கள் அதிகரித்தார்......