பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் இ 37 னும் ஆணிப்பொன் கட்டிலிலே இன் பத்தில், தம்மை மறந்த சுகத்திலே, ஆழ்ந்து கிடக்கிறார் கள் எவ்விதம்? சேற்றிலே எருமை கிடக்குமே, தன்னை மறந்து, சூழ்நிலை மறந்து, இன்பக் களிப்பிலே சொக்கிப்போய்-அதைப் போல! அருமை மகள் தனக்கேற்ற அன்பனோடும் ஆணிப் பொன் கட்டில் எனும் சேற்றினுள்ளே எருமை எனக் கிடத்தின்பம் நுகர்’ பன்றிக் குட்டிகள் தாய்ப்பால் அருந்தும் பான்மை ஒற்றுமையின் எடுத்துக் காட்டு. எல் லாம் கடிடிச்சண்டை சச்சரவு இல்லாமல் தாயிடம் பால் அருந்தி உல்லாசமாக உலவும். இவ்விதம் மக்களும் நிறையன்பால் ஒற்றுமையாய் வாழலாம் அல்லவா? உலக ஒற்றுமைக்கு உவமையாக இச் சித்திரம் ஆளப்படுகிறது. சுரந்தபால் இருந்தருந்திப் பரந்துலாவும் நெடும்பன்றிக் குட்டிகள் போல் இக்கள் யாவரும் நிறையன் பால் உடன்பிறந்தார் என் ஆணர்த்தக் கிடந்துதவும் புரிகின்ற உலகு" தன்னுணர்வற்றுப் போய் மயங்கிக் கிடக்கும் துன்ப நிலையை இரண்டுள்ளம் சுரப்பற்ற பசுக் காம்பைப்போல் எந் நினைவும் இல்லாமல் துன் பமே எனக் கூறுவது நன்றாயிருக்கிறது. பயந்தோடும் மனிதர்கள் வேகமாக ஒடு கிறார்கள். நாலாபுறமும் பயமுறுத்தும் பூதம் தொடர்வதாகப் பிரமை கொண்டு திரிகிறார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை. அங்கே பூதம், இங்கே பூதம் என்று விழுந்தடித்து ஒடி.