பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன்னல் திறக்கப்படுகிறது. சாளரத்தின் பின் நின்று அழகை விழுங்க முயல்யவ னின் பார்வையிலே படுகிறது விரிந்த பந்தல் பிரித்த தாமென மின்னொளிக்கும் வானம்! விண்மீன் சோலை யிலே விழிகள்! பறக்க முகல்கின்றன. கணக்கற்ற வெள்ளிகள்! எல்லையற்ற அழகின் மலர்ச்சி சிரிக்கும் விண்மீன்கள் பல, உள்ளத்தைத் தொடக் கண்களில் ஒளி சேர்க்கின்றன. இதோ: அதோ!" என்று சுட்டிக் காட்ட விரல் முந்துகிறது. என்றாலும் அழகு முழுவதையும் எல்லை கட்டிவிட முடியாது. வியப்புகள் அத்தனையையும் வலை வீசிப் பிடித்துவிட முடியாது. எனக்குத் தெரியும் , எனது இந்த முயற்சியும் அதே கதை என்று. நான் கவிஞர் பாரதிதாசன் கவிதா மேதைக்கு எல்லை கட்டி அனந்து காட்டிவிட்டேன் என்றோ, கவிஞரின் திறமை இவ்வளவே என்றேன் சோல்லவர வில்லை. அப்படி யாரும் சொல்லவும் 莓斗鲇· இம் முயற்சி கவிஞரின் கருத்துக்களுக்கு விரிவுரை அல்ல. நாலு வரிகளை வைத்துக்கொண்டு நாலு பக்கம் ஆகா அற்புதம் என அளக்கும் வித்தை அல்ல. கவிஞரின் சொற்களுக்குப் பதவுரை பொழிப்புரை கூறும் வேலையும் அல்ல,