பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 69 புனத்திலுறும் புதல்போலே வளர்ந்ததாலே புறத்தொடர்பே இல்லாத முதிய ஆத்தா, அனற்கொள்ளி பட்ட பிள்ளை கதறும் போதில் அம்மா என்பது போலே துணைவன் தன்னை நினைத்தவளாய்த் தாழ்.குரலில் அத்தான்’ என்றாள் வானம் இருண்டது. மின்னல் பளிச்சிட்டது, இடி அதிர்ந்தது. பின் மழை. வானம் கண்ணிர் சொட்டும் காட்சிக்கு அழகான உவமைகள் கடறும் கவியின் திறம் போற்றுதற்குரியது. கல்வி யறிவு அற்றவனின் உள்ளம் போல இருள்கிறது. வழக்காடிப் பொருளை எல்லாம் இழந்துவிடு வது உண்மை. அப்படி வழக்குகளில் ஈடுபட்டு வறியனாகிறவன் செல்வம் மின்னல் ஒளிர்ந்து மாய்வதற்கு உவமை. பொருள் இழந்தவன் அலறுவது போல இடி உறுமுகிறது. கேள்வி இலார் நெஞ்சம் போல் இருண்டு, நீளும் வழக்குடையார் செல்வம் போல் மின்னி மாய்ந்து வண் பொருளை இழந்தான் போல் அதிர்ந்து 蚤邸匈了萤 மழைக்கண்ணிர் .குத்தது வான்?' படித்து அனுபவிக்க வேண்டிய பகுதி. காற்று பாய்ந்து சிறு படகில் மோதுவதை * பழக்குலை மேல் எறிந்த குறுந்தடியே போல் பாய்ந்த தொருபெருங் காற்று படகு நோக்கி' என்று ரசமாகச் சொல்கிறார் கவி. பாராட்ட வேண்டிய உவமை. அதே போன்றதுதான் வேப்பிலைகளுக்கு அவர் காட்டும் உவமை. தேளெடுத்து வைத்ததென இருக்கும்"