பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் இ 71 பாட்டுப் பாடுகிறான் நம்மவன்தானே தெலுங் கிசை பாடுகிறான் என்று இன்புறுகிறார்களா தமிழர்? தெலுங்கினிலே பு: டிடு மோர் தமிழன் செய்கை தேனென்றா நினைக்கின்றார் தமிழகத்தார்?" அதுபோல்தான் அவனையும் இவர்கள் வெறுக்கிறார்களாம்-தந்தையும், மகனும். இயற்கை வர்ணனை ஒன்து. மேல வானிலே செங்கதிர் மறையும் கோலம். அத்திசை பொன் னாறு. மிதக்கும் ஞாயிறு செவ்விய மாணிக்க ஒடம். ஒளியின் வீச்சு அற்புதக் காட்சி. "பாரடி நீ மேற் றிசை வானத்தை அங்கு தேங்கி நிற்கும் பொன்னாற்றில் சேழுமாணிக்கச் செம்பருதிப் படகோடும்; கீழ்த் திசை வான் வாங்கி நிற்கும் ஒளியைப் பார் காட்சித்தேனில் வண்i.டி நாம்!” நதிப்புனலில் படகில் செல்லும் தலைவி தோழி யிடம் கடறுகிறாள் இப்படி, இனிய வர்ணனை. கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் இனிமைக் கும் அழகுக்கும் புதுமைக்கும் குறைவே கிடை யாது. எல்லாம் இன்பப் பெருக்கு, தமிழ்த் தேன் சுவை அவரது கவிதை தருவது. அவரது கவிதை களை ருசிக்கும்போது நாமும் மது மாந்தும் வண்டுகள் ஆடுவிடுகிறோம். இன்பம்! மகிழ்வு! இத்தகைய விருந்தளிக்கும் கவிஞரை வாழ்த்து கிறேன். போற்றுகிறேன். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வாழ்க! ○ ○ ○