பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பாரதிதாசன்



தாழச் சுடுவெய்யில் தாளாமல் நான்குளிர்ந்த
நீழலைத்தாவும்போது நில் என்று நீதடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதே என்றாய்! நேற்றுப்
பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?
உன்னோடு பேச ஒரு வாரம் காத்திருந்தேன்
என்னோடு முந்தா நாள் பேச இணங்கினாய்!
நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டினாய்! இன்று
சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை"

என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, ‘காதலரே!
அன்றுநீர் சொன்னபடி அவிரண்டு மூலிகையைச்
சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்ச்
கொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்,
இல்லையென்றால் ஆவி இரா' தென்றாள். வேட்டுவன்
'கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்' என்றுரைத்தான்.
‘கால் இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம்
மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்ப தால்' என்றாள்.
'பாழ்விலங்கால் அந்தோ படுமோசம் நேரும்' என்றான்,
‘வாழ்வில் எங்கும் உள்ளதுதான் வாருங்கள்' என்றுரைத்தாள்.
‘அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்,
இவ்விடத்திற் கேட்டுக்கொள்' என்றுரைத்தான் குப்பன்;
‘ஒன்றைத் தின்றால் இவ் உலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும் மற்றொன்றைவா யில்போட்டல்
மண்ணுலகக் காட்சி எலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்;
ஆதலால் மூலிகையின் ஆசை தணி' என்றான்.
'மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை' என்றாள்.
'என்னடி! பெண்ணே நான் எவ்வளவு சொன்னாலும்
சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்
பெண்ணுக் கிதுதகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே