பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 99

பெண் உடைத்தாள் என்று பெரும்பழியை மாமி அவள் சூட்டினாள் அந்தக் துடுக்குமகன் தாயின் சொல் கேட்டுக் கயிற்றால் கிளிமொழியை ஒர்தூணில் கட்டினான்; கட்டிக் கழியால் அடிக்கையிலே மங்கையைப் பெற்றவர்கள் வந்தார். நிலைகண்டார்:

தங்கமே என்று தலைமீது கைவைத்துத் தேம்பி அழுது, சிறிது பொறுப்பீரோ கட்டவிழ்க்க மாட்டீரோ என்று கதற, அவன் கண்ணான பெண்ணாளைக் கட்டவிழ்த்துவிடு என்றான். பெண்ணாளின் மாமியவள் “பெண்ணெனன்றால் இப்படியா!

கொண்டவனை மீறுவதா? கொண்டவனை அண்டாமல் கண்டவனை அண்டிக் கதை பேசப்போவதுண்டா! என்று பலபொய் எடுத்தெடுத்து வீசலுற்றாள்; என்றைக்கும் வாழாள் இவள் என்றாள் மாமனும்.

普 骨 骨

அந்நாள் இரவில், அணங்குதனை, பெற்றவர்கள் பொன்னையன் வீட்டுக்குப் போய், இதனைக் கூறி எதுசெயலாம் என்று வினவ, அவன் சொல்வான்; இதுவெல்லாம் முன்னாள் பிரமன் எழுதியதால் ஆரும் அழிக்க முடியாது, கொண்டவனால் நேருவதை நாம்தடுக்க எண்ணுவதும் நேர்மையில்லை, பெண்டாட்டி என்றும் பிழைசெய்யக் கூடியவள், கொண்டவன் கொல்வான், அணைப்பான் அவன் விருப்பம்