பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாரதிதாசன்

இந்நாள் இதுவெல்லாம் நான்சொல்லும் சொல்லல்ல. அந்நாள் மனுவே அழுத்தி எழுதியவை. என்றுரைக்கப், பெற்றவர்கள் உள்ளம் எரிந்தவராய்க் கன்றைப் பிரியும் கறவைஎனக் காலையிலே பெண்ணைப் பிரிந்து பெருந்துன்பம் மேலிட்டு வெண்ணெய்நல்லூர் வண்டியின் மேலேறிச் சென்றார்கள். வஞ்சி, மரச்சருகுவாதான்ுர்ச் சாலையிலே கொஞ்சநஞ்சமல்ல குவிந்து கிடந்திடுசே ஆலைச்சங் கூதும் அதிகாலையில் நீபோய் நாலுசுமை கட்டிவந்தால் நாலுபணம் மீதியன்றோ? என்றுரைத்தாள் மாமி. இதுகேட்ட தங்கம், தன் பொன்னான அத்தான்்பால் போயுரைப்பாளாயினாள்: வஞ்சி, சருகுக்கு மாமியார் போ என்றார், கொஞ்சம் விலையே கொடுத்தால் அதுகிடைக்கும்; பத்துக்கல் ஓடிப் பாடாய்ப்பாடு பட்டிட நாம் சொத்தில்லா ஏழைகளா சொல்லுங்கள் என்றுரைத்தாள். நன்செயிலும் புன்செயிலும் நானுறு காணியுண்டு இன்னுமுண்டுதோப்பும் இருப்பும். இருந்தாலும் என்தாயின் சொல்லை நீ ஏன்மறுத்தாய்? நாள்தோறும் சென்று சுமந்துவர வேண்டுஎன்றான் தீயவனும்: நெஞ்சம் துடித்தாள். நிலைதளர்ந்தாள். அத்தான்ைக் கெஞ்சினாள், அந்தப் பழக்கம் கிடையாதே! ஒன்றியாய்ப் போவதற்கும் என்னுள்ளம் ஒப்பாதே. சென்றுரைப்பீர் மாமியிடம் செல்லாவகைசெய்ய, என்றான். பயனில்லை. இரவு கழிந்தவுடன்