பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 101

சென்றாக வேண்டுமென்று சிங்கக் கணாக்கண்டாள்.

மாடியிலே மங்கையர்களோடிருந்து பந்தாடி வாடினேன் என்று வலஞ்சுழியம் அப்பவகை உண்ணென்று தாய்எனக்கே ஊட்டுகையில் நான் அவற்றை மண்ணென்றுமிழ்ந்ததெலாம் எண்ணி அழுவேனா? சூட்டுமலர் வாட, மணிச் சுட்டியொடு நான்களைந்தே போட்டு வயிரப் புதுச்சுட்டிவாங்கியதை எண்ணி அழுவேனா எருமைமுதுகென்புபோல் பண்ணிய தங்கமணிக்கோவை பழையதென்று வேலைக்காரிக்குவிடியலில் நான்தந்து மாலையிலே மற்றொன்று வாங்கியதை எண்ணி அழுவேனா? மான்குட்டிகேட்ட அளவில் எழுதி வரவழைத்த தெண்ணி அழுவேனா?

அண்டைத் தெருவுக்கும் ஆடும் இருகுதிரை வண்டிஎன்றால் வந்துநின்ற தெண்ணி அழுவேனா? இந்நாளில் என் கணவர் இல்லத்தில் நாள்தோறும் தொன்னையிலே நொய்க்கஞ்சி தூக்கிக்குடி என்னும் அன்பில்லார்க் காட்பட்ட தெண்ணி அழுவேனா? என்பொடிய நான் உழைப்பதெண்ணி அழுவேனா? உள்ளம் அறிய ஒருபிழைசெய்யாவிடினும் தள்ளித்தலையுடைப்பதெண்ணி அழுவேனா? வஞ்சிக் சருகெடுத்து வா என்ற சொல்லுக்கே அஞ்சி நடுங்குவ தெண்ணி அழுவேனா? என்று துடித்தழுதான்் ஏனழுதாய் என்றுரைத்த முன்வீட்டு முத்தம்மா என்னும் முதியவள்பால்: அவ்போது தங்கத்தின் அத்தான்ும் மாமனும் எப்போதும்போல இருந்தார்கள் திண்ணையிலே!