பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - பாரதிதாசன்

ஆளவந்தார்க் காளாய் அமைந்திட்ட காவலர்கள் வாள்இடுப்பில் கட்டிவலக்கையில் செப்பேட்டை ஏந்தி, இவர்கள் எதிரினிலே வந்து நின்று சூழ்ந்துள்ள மக்களுக்குச் சொல்வார் வெங்குரலில்: பெண்டாட்டி என்ற பெயர்அடைந்த நாள்முதலே ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதிக் குண்டுரிமை! தம்மனைவி செத்தால்தான்் வேறுமணம் தான்்செயலாம் இன்னல் மனைவிக் கிழைத்தல் கொலைக்குற்றம். ஆளவந்தார் ஆணைஇதுவென்றே அறிவித்து. வாளுருவிக் காட்டி வழிநடந்து சென்றார்கள்.

骨 를

மங்கை அதுகேட்டாள், ம்ணவாளனும் கேட்டான் அங்கிருந்த மாமனும் கேட்டாள், அவன் சென்று தன்மனைவி காதில் தனியாக நின்றுரைத்தான்் முன்நிகழந்த துன்ப வரலாறு முற்றிற்றே,

普 骨 பின்பொருநாள் வீட்டுப் பெருங்கணக்கு மாறுபட என்னவகை கண்டறிவ தென்றறியா மாமன்தான்் தன் மகனைக் கேட்டும் சரிசெய்யத் தோன்றாமல் அன்பு மருமகளை அண்டி"ஒருவிண்ணப்பம் என்றான், மருமகளும் என்னவென்றாள். இக்கணக்கில் நின்ற பிழைதன்னை நேராக்க வேண்டுமென்றான், இன்னும் அரைமணிக்குப் பின்னால் நினைப்பூட்டிச் சொன்னால் சரிபார்க்கத் தோதுபடும் என்றுரைத்தாள்.

骨 骨 博