பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாரதிதாசன்

வாய்வழியும் எச்சிலோடு காலால் வழிதடவி முள்ளில் விழுந்தெழுந்து முன்காலில் புண்ணடைந்து கள்ளுண்டான் போல்உடல் தள்ளாடிக் காலிடறிக் சோளம்வளர்கொல்லையிலே நின்றிருந்த தோகையினை மூளும் வெறியாலே மொய்குழலே என்றணுகித் தாவி அணைந்தான்், தனித்திருந்த அவ்வைக்கோற் பாவையுடன் வீழ்ந்தான்் படுகிழவன்! அண்டை மறைந்திருந்த தோழன், அங்குவந்திருந்தவர்.பால்

அறைவான:

கிழவன் மணம் கேட்பான் அஃதியற்கை தன்னொத்த மூத்தாளைத் தான்்தேடல் வேண்டும். இள மின்னொத்தாள் வேண்டும் எனல் தீது.

(வைக்கோற் பாவை-விளைவுள்ள நிலத்தில், வைக்கோலால்

செய்து நிறுத்தப்படும்புல்லுரு)

- 1948 (சிங்கப்பூர 'தமிழ் முரசில்” வெளிவந்தது)

Ο Ο Ο