பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாரதிதாசன்

வாய்ச் சொல்லாய்த் தோளில் வலி" என்றான். மட்டாகக் காய்ச்சல்என்று சொன்னார் மருத்துவரும் கைபார்த்து நாலு நாட் பின்னை நளிர்ஏற நாவடங்கிப் பாலும்உட்செல்லாத பான்மை ஆடைந்தே இறந்துவிட்டான் அங்கமுத்து முத்தம்மை மார்பில் அறைந்தபடி கூவி அழுது புரளுகையில் அண்டை அயலுள்ளார்.அங்கமுத்தின் மெய்கழுவித் தொண்டர் சுமக்கச் சுடுகாட்டை எய்துவித்தார். நாள்கள்நில்லாது நடந்தன முத்தம்மை வாட்டுகின்ற ஒவ்வோர் நொடிக்கும் மனம் பதைத்தாள். அங்கமுத்து மாண்டான். அறுபதுநாள் சென்றபின்னும். எங்கும் அவனே என அழுதாள் முத்தம்மை! மாதங்கள் மூன்று மறைந்தபின்னும், அங்கமுத்தின் காதில் விழும் என்றழைப்பாள் கண்ணாளா என்று!

4

துணைவனைச் சுட்ட சுடுகாட்டைநோக்கி இணை விழிகள் நீர்பெருகச் சென்றாள். இடையிலே நள்ளிரவில், மக்கள் நடப்பற்ற தோப்பினிலே பிள்ளையின் பேர்சொல்லிக் கூவினாள் அங்கொருத்தி. தங்கமுத்தே தங்கமுத்தே என்றபெயர்தான்்கேட்ட மங்கையவள் முத்தம்மை வந்தான்் கணவனென்று. நின்றாள். விழியால் நெடிதாய்வாள் தோப்பெல்லாம். தன் துணைவன் போலத்தனியாக வந்துநின்றான். யார் என்றுகேட்டாள். நீ யார்என்றான் வந்தவனும், தேரோடும்போதே தெருவில்அது சாய்ந்ததுபோல் மாண்டார்என் அத்தான்் மறைந்தார் சுடுகாட்டில் ஈண்டுநான் வந்தேன் எதிரில் உமைக்கண்டேன். உம்பெயரை யாரோ உரைத்தார்.அது துணைவர் தம்பேர்போல் கேட்டதனால் தையலுளம் பூரித்தேன்.