பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 115

என்பெயரோமுத்தம்மை என்றாள், அதுகேட்டுத் தன்பெயர் தங்கமுத்தென்றான். தளர்வுற்றாள். தூயான் எரிந்த சுடுகாடு போகலுற்றாள். நீஏன் சுடுகாட்டை நேர்கின்றாய் மங்கையே நானுன் மணவாளன்! நானுன் மணவாளன்! தச்சுவே லைசெய்யும் தங்முத்துப் பேர்சொன்னால் மெச்சாதார் யாருமில்லை மெய்ம்மைஇது கேட்டுப்பார். தன்னத் தனியாய்நீநானும் உடன் வருவேன் என்றான். அவளும் எதிரொன்றும் கூறாமல் சென்றாள். உடன்சென்றான், செங்கதிரும் கீழ்க்கடலில் தோன்றியது. தோகைக்கும் தங்கமுத்தின் மேல் உள்ளம் ஊன்றியது. தாமே உறுதிசெய்தார் தம்மணத்தை.

தங்கமுத்தின் அன்னை தளர்ந்த பருவத்தாள் மங்காத செல்வம்போல் வாய்த்த மருமகளைக் காணும்போதெல்லாம் மகிழ்ச்சிக் கடல்படிவாள்; ஆணகழகன் தன்மகனும் அன்பு மருகளும், வேலையில்லாப் போது விளையாடல் தான்்கண்டு மூலையினில் குந்தி முழுதின்பமே நுகர்வாள். ஆண்டொன்று செல்லஅவள் ஆண்குழந்தை ஒன்று பெற்றாள். ஈண்டக் குழந்தைக் கிரண்டுவயதான்வுடன் தங்கமுத்து மாண்டான். தளர்ந்தழுதாள் முத்தம்மை மங்கை நிலைக்கு வருந்தினாள் அக் கிழவி.

5 மாமிதன் வீட்டினை நூறு வராகனுக்குச் சாமியப்பனுக்கவிற்றுத் தையலிடம் தந்து கடையொன்று வைக்கக் கழறினாள். அன்னாள் உடனே கடைதிறந்தாள். ஊர்மதிப்பும் தான்்பெற்று வாழ்கையில் ஒர்நாள், மனைவி தனைஇழந்த