பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாரதிதாசன்

கூழப்பன், மங்கையிடம் தன்குறையத் கூறலுற்றான். மாடப் புறாப்போல் மயில்போல் குயில்போலத் தேடி மணந்தேன். பத்தாண்டும் செல்லப் பிள்ளையில்லை. வேறேஓர் பெண்ணையும் நீமணந்து கொள்என்றாள். கோதையே நீயிருக்கு மட்டும் எவளையும் தீண்டே நான் என்று முடித்தேன்; அவள் அன்று மாலை அனல்மூழ்கி மாண்டுவிட்டாள். இப்படிச்செய்வாள்ன்ெறெனக்குத் தெரிந்திருந்தால் அப்படிநான் சொல்ல அணுவளவும் ஒப்பேன். மணம்புரிய வேண்டும்நான் மக்கள்பெற வேண்டும். தணல்மூழ்கி னாளின் எண்ணமிது தான்்என்றான். கேட்டிருந்த முத்தம்மை கிள்ளிஎறி பூங்கொடிபோல் வாட்டம் அடைந்தாள். மனமெல்லாம் அன்பானாள். என்னை மணப்பீரோ என்றன் அருமை மகன் தன்மைஉம் பிள்ளையெனத் தாங்கத் திருவுளமோ? ஐயாவே என்றாள். உடனே, அருகிலுறும் பையனைஅன்னேன்துக்கிப் பத்துமுறை முத்தமிட்டான்.

6 தங்கமுத்தின் தாய்கண்டாள் கூழப்பனின் உருவில் தங்கமுத்தையேகண்டாள் தணியாத அன்பினால் வாழ்த்தினாள் முத்தம்மை கூழப்பன் மாமணத்தை! வீழ்த்தினார் அவ்விருவர் மேல்வீழ்ந்த துன்பத்தை! பூவும் மணமும்போல் பொன்னும் ஒளியும்போல் கோவையிதழ் முத்தம்மை கூழப்பன் இவ்விருவர் ஒத்தின்ப வாழ்வில் உயர்ந்தார். வாணிகமும் பத்துப்பங்கேறியது. பையன்வயதும் இருபதாயிற்று. மணம் செய்யஎண்ணிப் பெருமாளின் பெண்ணைப் போய்ப் பேசுவதாய்த் திட்டமிட்டார்.