பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 117

7

மாலையிலே முல்லை மலர்ப்பொடியைத் தான்ள்ளிச் சோலையெலாம் வண்டிருந்து சூறையிடும் தென்றலிலே மேலாடை சோர விளையாடும் தோகைஎதிர் வேலன் வரலானான். கண்டாள் விளம்புகின்றாள்: உம்மைக் கடைத்தெருவில் கண்டேன் நெடுநாள் பின் மெய்ம்மறவர் வாழ்தெருவில் கண்டு வியந்ததுண்டு. எந்தப் பெண்ணுக்கா இவ்வுலகில் வாழ்கின்றீர்? அந்தப்பெண் உம்மை அடையப் புரிந்ததவம் யாதென்றாள். வேலன் இயம்பத் தலைப்பட்டான். காதலெனும் பாம்புக் கடிமருந்து நீஎன்று, தேடிவந்தேன் ஒப்புதலைச் செப்பிவிடு. நீவெறுத்தால் ஓடிஇதோ என்உயிர் மாய்த்துக் கொள்ளுகின்றேன் என்றான், உனக்கு நான் என்றாள். உவப்புற்றான். நின்றாளின் நேர்நின்றான். நீட்டிய கைம்மேல் விழுந்தாள். மாலை மறைந்ததையும், வல்லிருட்டு வந்ததையும், சோலை விளக்கம் தொலைந்ததையும் தாம் உணரார். குப்பத்து நாய்தான்் இடிபோற் குரைத்ததனால் ஒப்பாமல் ஒப்பி உலகை நினைத்தார்கள். விட்டுப் பிரியமனம் வெம்பிப் பிறர்விழிக்குத் தட்டுப் படாதிருக்கத் தத்தம் இடம்சேர்ந்தார்.

8 பெருமாளிடம்சென்றான் கூழப்பன், பெற்ற ஒருமகளை வேலனக்கே ஒப்படைக்க வேண்டுமென்றான். தாயோ பழியுடையாள், தந்தையும் நீயல்லை, சேயோதிருவில்லான் என்றான் பெருமாள். வருந்தினான் கூழப்பன் வாழ்க பெருமாள் மருமகனாவதற்கு வாய்த்தபல பண்புகள்