பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாரதிதாசன்

'அவ் இரண்டு மூலிகையில்.ஆரணங்கே நீ ஆசை இவ்வளவுகொண்டிருத்தல் இப்போது தான்் அறிந்தேன். கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்; நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்? என்று மொழிந்தான்், எழுங்காத லால்குப்பன். முன்னே இலைகொடுத்தால் முத்தம்பிற கென்றாள். ‘என்கிளியே நீமுத்தம் எத்தனை ஈ வாய்? என்றான். 'என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி - நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன் என்றாள். ஆகையால் ஓர் முத்தம் அச்சாரம் போடென்றான். கேலிக்கு நேரம் இதுவல்ல. கேளுங்கள் மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும் என்றாள்.

★ xr ★

குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால் எப்போது நாம் உச்சிக்கேறித் தொலைப்பதென அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை! கண்ணாட்டி தன்னையும் ஓர் கண்ணாற் கவனித்தான்். வஞ்சி அப்போது மணாளன் மலைப்பதனைக் கொஞ்சம் அவமதித்தும் கோவை உதடு திறந்தாள். திறந்து சிரிக்குமுன், குப்பன் பறந்தான்் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே. கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம். மாமலைதான்் சென்னி வளைந்து கொடுத்ததுவோ நாம்மலைக்கக்குப்பன் விரைவாய் நடந்தான்ோ, மங்கையினைக் கீழிறக்கி மாதே இவைகளே அங்குரைத்த மூலிகைகள், அட்டியின்றிக் கிள்ளிக்கொள்