பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளைக் கண்டீர்

தாய்

பாம்பு கடித்ததம்மா பச்சைக் குழந்தையினை மாம்பூ மலையில் மருந்திருக்கும் என்கின்றார் நீதான்் மருத்துவச்சி நீயதனை நன்கறிவாய் தீது வருமுன்னே தேடிவந்து தந்திடுவாய். மருத்துவிச்சி சிட்டாய்ப் பறந்திடுவேன் சேயிழையே அஞ்சாதே கட்டாயம் பிள்ளையினைக் காத்திடுவேன் அஞ்சாதே கூடக் கணவனையும் கூட்டிநான் போய்வருவேன். (போதல்) மத்துவன் எங்கே நீ சென்றிருந்தாய் என்னருமைக் கண்ணாட்டி! தங்கமே நீ பிரிந்தால் தாங்கிடுமோ என் உள்ளம்? மருத்துவிச்சி தெற்குத் தெருவினிலே செங்கேணி ஆச்சிபிள்ளை பற்கிட்டித் தொல்லை படுகின்ற நேரமிது! பாம்புகடித்த தத்தான்் பச்சிலைக்குப் போவோமே மாம்பூ மலைநோக்கி வாராய் விரைவாக.

(போகிறார்கள்)

மருத்துவன் வெய்யில், நடப்பாரை வேகடிக்கும் நேரமடி ஐயோ நடுவழியில் அல்லல் மிகுத்ததடி