பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாரதிதாசன்

மருத்துவச்சி அல்லல் மிகுத்தாலும் அத்தான்ே ஆச்சிபெற்ற செல்வனை நாம் காப்பாற்றச் செல்வோம் விரைவாகச் செங்காடு தாண்டிச் செழுங்காட்டை நாம் அடைந்தோம் வெங்காயக் காட்டை விலக்கி அதோ தெரியும் மாம்பூ மலையில் மருந்தெடுக்க மாட்டோமோ? பாம்புக் கடிவிலக்கும் பச்சிலையைத் தேடோமோ?

(போகிறார்கள்) மருத்துவச்சி அத்தான்்என் காலிலே ஆணிமுள்தைத்துவே தைத்த இடத்தினின்று செங்குருதி சாய்ந்திடுதே. மருத்துவன் கண்ணே மணியே.என் கட்டிக் கரும்பனையாய் வண்ணாத்திப் பூச்சி இறக்கைபோல வாய்த்த உன் மெல்லடியின் உட்புறத்தில் வேல்பாய்ந்தால் என்னாகும்? சொல்லடிநீமேல் நடக்கத் தோதுபடுமா என்ன? மருத்துவச்சி ஆணிமுள்ளை வாங்கிவிட்டேன் அத்தான்ே புண்வாயைப் பேணத் துணி கிழித்துக் கட்டிவிட்டேன் பேச்சென்ன? இன்னும் விரைவாய் நடப்போம் இளையானைத் தின்னும்அந்த நஞ்சுதனைத்தின்ன இலைபறிப்போம்.

(போகிறார்கள்)

மருத்துவன் புள்ளிச் சிறுத்தைஒன்று போர்முரசு கொட்டியது அள்ளிச் சொரிந்ததுவே நம்மேல் அனல்விழியை.