பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாரதிதாசன்

மருத்துவன் பாராய் இளமானே பச்சைப் பசேல்என்று நேரே இலைகள் நெருங்கப்படர்ந்தகொடி எட்டா உயரத்தில் உள்ளதடி என்மயிலே நெட்ட நெடும்பாரை நீளுச்சி மேலேறிக் கையால் பறிக்கையிலே கால்தவறி விட்டாலோ பொய்யாகிப்போகுமடிவாழ்வு புதுநிலவே. மருத்துவிச்சி நானேறுகின்றேன் நலிவின்றி நீயிருப்பாய் ஊனெடுத்தோம் என்ன பயன்? ஊருக்கு உழைப்போமே மருத்துவன் கட்டாணி முத்தேஎன் காதலியே நீபொறுப்பாய் எட்டா இலைதன்னை எட்டிப் பறித்திடுவேன்.

(ஏறுகிறான், பறிக்கிறான்) பாரை வழுக்கிடுதேபாவையே என்செய்வேன் வாராத சாக்காடு வந்ததடிவந்ததடி!

(விழுகிறான் மனைவி முதுகால் தாங்குகிறாள். இருவரும் தரையில் வீழ்ந்து அடிபட்டுக் கிடக்கிறார்கள் எழுகிறார்கள்)

மருத்துவன் மெல்ல நடப்போம்நாம் வேளையுடன் வீடுசெல்வோம் சொல்லிய வண்ணம் சுருக்காக நாம்செல்வோம் பாம்பால் கடிபட்ட பச்சைக் குழந்தைக்கு நாம்போய் உயிர்மீட்போம் நல்லத்தான்் வாராயோ!

(போகிறார்கள்)